எவ்வாறு உதவி பெறுவது?

Workplace ஐப் பயன்படுத்துவது தொடர்பான உதவி தேவைப்பட்டால், கீழுள்ள வழிகளைப் பின்பற்றலாம்.
நீங்கள் நிர்வாகியாக இருந்தால்:
உங்கள் பக்கத்தின் மேல் வலதுபுறத்தில், என்பதைக் கிளிக் செய்யவும். அங்கிருந்து, நீங்கள்:
  • Workplace ஆதரவைத் தொடர்புகொள்ளவும் . எங்கள் ஆதரவுக் குழு 48 மணிநேரத்திற்குள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
  • உங்கள் ஆதரவு இன்பாக்ஸை அணுகவும். Workplace ஆதரவுடனான தொடர்பை இங்கே காண்பீர்கள். ஆதரவு இன்பாக்ஸ் அல்லது அலுவலக மின்னஞ்சல் மூலமாக, செய்திகளுக்குப் பதிலளிக்கலாம்.
  • கேள்வியைச் சமூகத்திடம் கேட்கவும் உதவி சமூகம் என்பது உங்களின் Workplace பற்றிய கேள்விகளுக்கு, உங்கள் நிறுவனம் மட்டுமின்றி பிற நிறுவனங்களைச் சார்ந்த Workplace பயனர்களுடனும் இணைந்து, பதில்களை கண்டறியவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் இடமாகும். எங்கள் குழு உறுப்பினர்களும் கலந்துரையாடலில் பங்கேற்பர்.
  • கருத்துத் தெரிவிக்கவும். எங்களுக்கு அனுப்பப்படும் ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்து, அனைவருக்குமான Workplace அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் அவற்றைப் பயன்படுத்துவோம். உடனடி ஆதரவு தேவைப்படும் சிக்கல் இருந்தால், Workplace ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
தொடர்ந்து உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள்:
  • டெவெலப்பர் ஆதரவைப் பார்க்கவும். டெவெலப்பர் ஆதரவு என்பது உங்கள் நிறுவனத்திற்கும் மற்றும் Workplaceக்கும் இடையேயான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பற்றி அறியும் இடமாகும்.
  • தொடங்குவதற்கான மூலங்களைப் பார்க்கவும். உங்கள் நிறுவனத்தை Workplaceக்கு மாற்றத் தேவைப்படும் எல்லா வழிகளையும், தொடங்குவதற்கான மூலங்களில் காணலாம்.
நீங்கள் நிர்வாகி இல்லையெனில்:
உங்கள் பக்கத்தின் மேல் வலதுபுறத்தில், என்பதைக் கிளிக் செய்யவும். அங்கிருந்து, நீங்கள்:
  • கேள்வியைச் சமூகத்திடம் கேட்கவும் உதவி சமூகம் என்பது உங்களின் Workplace பற்றிய கேள்விகளுக்கு, உங்கள் நிறுவனம் மட்டுமின்றி பிற நிறுவனங்களைச் சார்ந்த Workplace பயனர்களுடனும் இணைந்து, பதில்களை கண்டறியவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் இடமாகும். எங்கள் குழு உறுப்பினர்களும் கலந்துரையாடலில் பங்கேற்பர்.
  • கருத்துத் தெரிவிக்கவும். எங்களுக்கு அனுப்பப்படும் ஆலோசனைகளை மதிப்பாய்வு செய்து, அனைவருக்குமான Workplace அனுபவத்தை மேம்படுத்துவதற்காகப் அவற்றைப் பயன்படுத்துவோம். உடனடி ஆதரவு தேவைப்படும் சிக்கல் உங்களிடம் இருந்தால், Workplace ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
குறிப்பு: உங்கள் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நிர்வாகியிடம் தெரிவிக்கவும்.
இந்தத் தகவல் உதவிகரமாக இருந்ததா?