Workplace தனியுரிமைக் கொள்கை


Workplace from Meta என்பது Meta உருவாக்கியுள்ள ஆன்லைன் தளமாகும். இதன் மூலம் வேலையில் பயனர்கள் கூட்டுப்பணியாற்றவும் தகவல்களைப் பரிமாறவும் முடியும். Workplace தளத்தினுள் Workplace வலைதளங்கள், செயலிகள் மற்றும் தொடர்புடைய ஆன்லைன் சேவைகள் ஆகியவை அடங்கும். இவை மொத்தமாக “சேவைகள்” என்றழைக்கப்படுகின்றன.
இந்தத் தனியுரிமைக் கொள்கை, சேவையை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தகவல்கள் எப்படிச் சேகரிக்கப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பதை விவரிக்கிறது.
இந்தச் சேவையானது நிறுவனங்களின் பயன்பாட்டிற்கானதாகும். அவற்றின் வழிமுறைகளுக்கு இணங்கி உங்களுக்கு வழங்கிய நிறுவனத்தால் அல்லது சேவைக்கான (உங்கள் “நிறுவனம்”) உங்கள் அணுகலையும் பயன்பாட்டையும் அங்கீகரித்த பிற நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தச் சேவை நீங்கள் பயன்படுத்தும் பிற Meta சேவைகளில் இருந்து தனிப்பட்டதாகும். அந்தப் பிற Meta சேவைகள் உங்களுக்கு Meta மூலம் வழங்கப்படுகின்றன மற்றும் அவற்றின் சொந்த விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும், அந்தச் சேவை உங்கள் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கை, ஏற்கக்கூடிய Workplace பயன்பாட்டுக் கொள்கை, Workplace குக்கீகள் கொள்கை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.
உங்கள் Workplace கணக்கிற்கும் (“உங்கள் கணக்கு”) அதை நிர்வகிப்பதற்கும் உங்கள் நிறுவனம் பொறுப்பாகும். சேவை மூலமாக நீங்கள் சமர்ப்பிக்கும் அல்லது வழங்கும் எந்தத் தரவின் சேகரிப்பிற்கும் பயன்பாட்டிற்கும் உங்கள் நிறுவனமே பொறுப்பாகும். அத்துடன் அத்தகைய உபயோகமானது Meta உடன் உங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் கூடுதலாக, இந்தச் சேவையை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்கள் நிறுவனம் கூடுதல் கொள்கைகளையோ நடத்தை விதிமுறைகளையோ கொண்டிருக்கலாம்.
இந்தச் சேவையை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.

I. என்ன வகையான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன?
நீங்களோ, உங்களுடன் பணிபுரிபவர்களோ, பிற பயனர்களோ இந்தச் சேவையை அணுகும்போது பின்வரும் தகவல்களை உங்கள் நிறுவனம் சேகரிக்கிறது:
  • முழுப் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் தொடர்புத் தகவல்;
  • உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்;
  • உங்கள் பணித் தலைப்பு, துறை தகவல் மற்றும் உங்கள் பணி அல்லது நிறுவனத்துடன் தொடர்புடைய பிற தகவல்கள்;
  • ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது பகிர்தல், பிறருக்கு மெசேஜ் அனுப்புதல் அல்லது அவர்களைத் தொடர்புகொள்ளுதல் உட்பட சேவையைப் பயன்படுத்தும்போது, நீங்கள் வழங்கும் உள்ளடக்கம், தகவல்தொடர்புகள் மற்றும் பிற தகவல்கள். படத்தின் இருப்பிடம் அல்லது கோப்பினை உருவாக்கிய தேதி போன்று நீங்கள் வழங்கிய உள்ளடக்கத்தில் உள்ள தகவல்கள் அல்லது அவற்றைப் பற்றிய தகவல்கள் (மெட்டாடேட்டா போன்றவை) இதில் அடங்கும்;
  • சேவையைப் பயன்படுத்தும்போது, பிறர் வழங்கும் உள்ளடக்கம், தகவல்தொடர்புகள் மற்றும் தகவல்கள். உங்கள் படத்தைப் பிறர் எப்போது பகிர்கிறார்கள் அல்லது கருத்து தெரிவிக்கிறார்கள், உங்களுக்கு எப்போது மெசேஜ் அனுப்புகிறார்கள், உங்கள் தொடர்புத் தகவல்களை எப்போது பதிவேற்றுகிறார்கள், ஒத்திசைக்கிறார்கள் அல்லது இறக்குகிறார்கள் போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள் இதிலடங்கும்.
  • சேவையின் பிற பயனர்களுடனான தகவல்தொடர்புகள் அனைத்தும்;
  • பயனர் தகவல்தொடர்புகள், பின்னூட்டங்கள், பரிந்துரைகள் மற்றும் உங்கள் நிறுவனத்திற்குப் பகிரப்படும் யோசனைகள்;
  • பில்லிங் தகவல்; மேலும்
  • சேவை தொடர்பாக நீங்களோ உங்கள் நிறுவனமோ உதவியைத் தொடர்புகொள்ளும்போது அல்லது அதனோடு செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் வழங்கும் தகவல்கள்.

II. இந்தத் தகவல்களை உங்கள் நிறுவனம் எப்படிப் பயன்படுத்துகிறது?
உங்கள் நிறுவனம் அது சேகரிக்கும் தகவல்களை, தளத்தை வழங்குபவர் என்ற முறையில் Metaவிற்கு வழங்கும். அவை உங்கள் நிறுவனத்திற்கும் பிற பயனர்களுக்கும், உங்கள் நிறுவனம் வழங்கிய ஏதேனும் பிற தகவல்களுக்கு இணங்கி சேவையை வழங்குவதற்கும் ஆதரிப்பதற்கும் Metaவை அனுமதிக்கிறது. இதுபோன்ற பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டுகள்:
  • சேவைகளின் பயன்பாடு குறித்து பயனர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தகவல்களைப் பரிமாற்றுதல்;
  • சந்தேகத்திற்குரிய செயலபாடு அல்லது பொருந்தும் விதிமுறைகள்/கொள்கைகளின் மீறலை விசாரிப்பது போன்ற உங்கள் நிறுவனத்திற்கும் பிற பயனர்களுக்கும் சேவையின் பாதுகாப்பை மேம்படுத்துதல்;
  • சேவையை வழங்குவதன் ஒரு பகுதியாக உங்கள் மற்றும் உங்கள் நிறுவனத்தின் அனுபவங்களைத் தனிப்பயனாக்குதல்;
  • உங்கள் நிறுவனத்திற்குச் சேவையினுள் புதிய கருவிகள், தயாரிப்புகள் அல்லது சேவைகளை உருவாக்குதல்;
  • சேவையின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டையும் மேம்படுத்த வெவ்வேறு சாதனங்கள் அனைத்திலும் சேவையில் உள்ள தொடர்புடைய செயல்பாடு ஒரே நபரால் செயல்படுத்தப்படுகிறது;
  • இருக்கின்ற பிழைகளைக் கண்டறிந்து, சரிசெய்தல்; மேலும்
  • சேவையை மேம்படுத்த ஆய்வு உட்பட தரவு, அமைப்பு பகுப்பாய்வை நடத்துதல்.

III. தகவல்களை வெளியிடுதல்
பின்வரும் வழிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்கள் நிறுவனம் வெளியிடுகிறது:
  • சேவையையோ சேவையின் ஒரு பகுதியையோ வழங்குவதில் உதவும் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களுக்கு;
  • சேவைகள் வழியாக நீங்கள் இணையக்கூடிய மூன்றாம் தரப்புச் செயலிகள், வலைதளங்கள் அல்லது பிற சேவைகளுக்கு;
  • சேவையை டிரான்ஸ்பர் செய்தல், இணைத்தல், ஒன்றிணைத்தல், சொத்து விற்பனை அல்லது பணம் திவாலாதல் அல்லது கடனைத் திருப்ப முடியாத நிலை போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் - இத்தகைய கணிசமான கார்ப்பரேட் பணப்பரிமாற்றம் தொடர்பானவை;
  • ஒருவரைப் பாதுகாத்தல்; மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களைச் சரிசெய்தல்; மேலும்
  • சம்மன், வாரண்ட், கண்டுபிடித்தல் ஆணை அல்லது சட்ட அமலாக்க ஏஜென்சி வழங்கும் பிற கோரிக்கை அல்லாத ஆணை தொடர்பானவை.

IV. உங்கள் தகவலை அணுகுதல் மற்றும் மாற்றியமைத்தல்
சேவையில் (எடுத்துக்காட்டாக உங்கள் சுயவிவரத் தகவலைத் திருத்துதல் அல்லது செயல்பாட்டுப் பதிவு மூலம்) உள்ள கருவிகளைப் பயன்படுத்தி சேவைகளில் நீங்கள் பதிவேற்றிய தகவல்களை நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் அணுகலாம், திருத்தலாம் அல்லது நீக்கலாம். சேவையில் வழங்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி அதை உங்களால் செய்ய முடியவில்லை எனில், உங்கள் தகவல்களை அணுக அல்லது மாற்றியமைக்க உங்கள் நிறுவனத்தை நீங்கள் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.

V. EU-அமெரிக்கா தரவுத் தனியுரிமைச் சட்டம்
Meta Platforms, Inc. ஆனது EU-அமெரிக்கத் தரவுத் தனியுரிமைச் சட்டத்தில் பங்குகொள்வதாகச் சான்றளித்துள்ளது. சான்றளிப்பில் குறிப்பிட்டுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காக அமெரிக்காவில் உள்ள Meta Platforms, Inc.க்குத் தகவல்களைப் பரிமாற்றுவதற்கு EU-அமெரிக்கத் தரவுத் தனியுரிமைச் சட்டத்தையும் ஐரோப்பிய ஆணையத்தின் தொடர்புடைய தேவையான முடிவையும் சார்ந்திருக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, Meta Platforms, Inc. நிறுவனத்தின் தரவுத் தனியுரிமைச் சட்ட வெளியிடலைப் படிக்கவும்.

VI. மூன்றாம் தரப்பினர் இணைப்புகள் மற்றும் உள்ளடக்கம்
உங்கள் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாத மூன்றாம் தரப்பினரால் பராமரிக்கப்படும் உள்ளடக்கத்துக்கான இணைப்புகளைச் சேவை கொண்டிருக்கலாம். நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு வலைதளத்திற்கும் தனியுரிமைக் கொள்கைகளை நீங்கள் படிக்க வேண்டும்.

VII. கணக்கினை மூடுதல்
சேவை பயன்பாட்டை நிறுத்த விரும்பினால், உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். இதேபோல், நீங்கள் நிறுவனத்துக்காக அல்லது நிறுவனத்துடன் பணியாற்றுவதை நிறுத்தினால், நிறுவனமானது உங்கள் கணக்கை இடைநிறுத்தலாம் மற்றும்/அல்லது உங்கள் கணக்குடன் தொடர்புடைய எந்தத் தகவல்களையும் நீக்கலாம்.
பொதுவாக, கணக்கு மூடுதலுக்குப் பிறகு, கணக்கை நீக்குவதற்கு 90 நாட்கள் ஆகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை சில தகவல்கள் காப்புப் பிரதி நகல்களில் இருக்கலாம். சேவைகளில் நீங்கள் உருவாக்கும் மற்றும் பகிரும் உள்ளடக்கம் உங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் நிறுவனம் உங்கள் கணக்கை முடக்கிய பிறகும் அல்லது நீக்கிய பிறகும், அணுகக்கூடிய வகையில் சேவைகளில் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இந்த வழியில், சேவைகளில் நீங்கள் வழங்கும் உள்ளடக்கமானது பணியின்போது நீங்கள் உருவாக்கக்கூடிய மற்ற வகையான உள்ளடக்கத்தைப்போல ( விளக்கக்காட்சிகள் அல்லது குறிப்புக்கள் போன்றவை) இருக்கலாம்.

VIII. தனியுரிமைக் கொள்கையின் மாற்றங்கள்
இந்தத் தனியுரிமைக் கொள்கை அவ்வப்போது புதுப்பிக்கப்படக்கூடும். புதுப்பிக்கப்படும்போது கீழே “கடைசியாகப் புதுப்பித்தது” என்பதில் உள்ள தேதி திருத்தப்படும் மற்றும் புதிய தனியுரிமைக் கொள்கை ஆன்லைனில் பதிவிடப்படும்.

IX. தொடர்புவிவரம்
இந்தத் தனியுரிமைக் கொள்கை அல்லது ஏற்கக்கூடிய Workplace பயன்பாட்டுக் கொள்கை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் நிறுவனத்தின் நிர்வாகி மூலம் உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும்.
கலிஃபோர்னியாவில் வசிப்பவர்கள், உங்கள் நிறுவனத்தின் நிர்வாகி மூலம் உங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உங்கள் வாடிக்கையாளர் தனியுரிமைகளைப் பற்றி மேலும் அறியலாம்.

கடைசியாகப் புதுப்பித்தது: அக்டோபர் 10, 2023