Workplace குக்கீகள் கொள்கை
குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை இந்த Workplace குக்கீகள் கொள்கை ("குக்கீகள் கொள்கை") விவரிக்கிறது மற்றும் குக்கீகள் மூலம் நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவின் எங்கள் செயலாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் Workplace தனியுரிமைக் கொள்கையுடன் இணைத்து இதைப் படிக்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் எங்கள் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் இணையதளமான workplace.comஐ (“Workplace Site”) நீங்கள் பார்க்கும்போது இந்த குக்கீகள் கொள்கை பொருந்தாது.
குக்கீகள் & பிற சேமிப்பகத் தொழில்நுட்பங்கள்
குக்கீகள் என்பவை இணைய உலாவிகளில் தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படும் சிறு உரைப் பகுதிகள் ஆகும். அடையாளங்காட்டிகள் மற்றும் பிற தகவலை கணினிகள், அலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களில் சேமிக்கவும் பெறவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் இணைய உலாவி அல்லது சாதனத்தில் நாங்கள் சேமிக்கும் தரவு, உங்கள் சாதனத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ள அடையாளங்காட்டிகள் மற்றும் பிற மென்பொருள் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பங்கள் , அதே நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கொள்கையில், நாங்கள் இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் "குக்கீகள்” என்று குறிப்பிடுகிறோம்.
குக்கீகளை நாங்கள் எங்கே பயன்படுத்துகிறோம்?
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு (நீங்கள் பணியாற்றுகின்ற நிறுவனம் அல்லது உங்கள் கணக்கிற்கான வசதியை வழங்கும் நிறுவனம்) நாங்கள் வழங்குகின்ற ஆன்லைன் Workplace தயாரிப்பை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் கணினி அல்லது சாதனத்தில் குக்கீகளை வைக்கலாம் மற்றும் குக்கீகளை சேமித்த தகவல்களைப் பெறலாம். இது Workplace தயாரிப்பு, செயலிகள் மற்றும் தொடர்புடைய ஆன்லைன் சேவைகள் (மொத்தமாக "Workplace சேவைகள்") உட்பட வேலையில் கூட்டுப்பணியாற்றவும் பகிரவும் பயனர்களை அனுமதிக்கிறது.
எவ்வளவு காலம் குக்கீகள் நீடிக்கும்?
எல்லா குக்கீகளுக்கும் காலாவதித் தேதி இருக்கிறது. இவை உங்கள் உலாவி அல்லது உங்கள் சாதனத்தில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைத் தீர்மானிக்கின்றன மற்றும் இவற்றை இரண்டு குழுக்களாகப் பிரிக்கலாம்:
- அமர்வு குக்கீகள் – இவை தற்காலிகமான குக்கீகள், உங்கள் உலாவியை மூடும்போதும் இவை காலாவதியாகின்றன (மேலும் தானாகவே அழிக்கப்படுகின்றன).
- நிலையான குக்கீகள் – இந்தக் குக்கீகள் காலாவதித் தேதியைக் கொண்டிருக்கும் மற்றும் அவை காலாவதியாகும் வரை அல்லது நீங்களாகவே அவற்றை நீக்கும் வரை அவை உங்கள் உலாவியில் நீடிக்கும்.
எதனால் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம்?
உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குவது மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை உங்களுக்கு வழங்குவது போன்று Workplace சேவைகளை நாங்கள் வழங்க, பாதுகாக்க மற்றும் மேம்படுத்த குக்கீகள் உதவுகின்றன.
குறிப்பாக, பின்வரும் நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம்:
குக்கீயின் வகை | நோக்கம் |
---|---|
அங்கீகரித்தல் | உங்கள் கணக்கைச் சரிபார்ப்பதற்கும் நீங்கள் உள்நுழைந்த நேரத்தைக் கண்டறிவதற்கும் குக்கீகளைப் பயன்படுத்துவோம். இதனால், நீங்கள் Workplace சேவைகளை அணுகுவதை எளிதாக்குகிறோம் மற்றும் உங்களுக்கேற்ற அனுபவத்தையும் அம்சங்களையும் வழங்குகிறோம். எடுத்துக்காட்டு: உங்கள் உலாவியை நினைவுகொள்வதற்கு குக்கீகளைப் பயன்படுத்துகிறோம், இதனால் நீங்கள் தொடர்ந்து Workplace சேவைகளில் உள்நுழைந்திருக்க வேண்டியதில்லை. |
பாதுகாப்பு, தளம் மற்றும் தயாரிப்பின் நம்பகத்தன்மை | உங்கள் கணக்கு, தரவு மற்றும் Workplace சேவைகளைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் நாங்கள் வைத்துக்கொள்வதற்கு உதவ, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எடுத்துக்காட்டு: உங்கள் அங்கீகாரம் இல்லாமல் உங்கள் Workplace கணக்கை யாரோ ஒருவர் அணுக முயன்றால், உதாரணத்துக்கு, தோராயமாக பல்வேறு கடவுச்சொல்லை யூகித்து அணுக முயற்சி செய்தால், அதுபோன்ற செயல்பாடுகளை அடையாளம் கண்டு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் உங்கள் கணக்கை நாங்கள் மீட்டமைக்க அனுமதிக்கும் தகவலைச் சேமிக்கவும் அல்லது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக நீங்கள் தெரிவித்தால், கூடுதல் அங்கீகரிப்பைக் கேட்கவும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எங்கள் கொள்கைகளை மீறும் அல்லது Workplace சேவைகளை வழங்கும் எங்கள் திறனைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவோம். |
அம்சங்கள் மற்றும் சேவைகள் | Workplace சேவைகளை நாங்கள் வழங்க உதவும் செயல்பாட்டை இயக்க, குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு: விருப்பத்தேர்வுகளைச் சேமிக்கவும், Workplace உள்ளடக்கத்தை எப்போது பார்த்தீர்கள் அல்லது தொடர்புகொண்டீர்கள் என்பதை அறியவும், தனிப்பயனாக்கிய உள்ளடக்கத்தையும் அனுபவங்களையும் உங்களுக்கு உதவவும் குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. நீங்கள் இருக்கும் இடத்திற்குத் தொடர்புடைய உள்ளடக்கத்தை வழங்குவதற்கு உதவவும் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு: உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உள்ள குக்கீயில் நாங்கள் தகவலைச் சேமிக்கலாம். இதனால் நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியில் சேவையைப் பார்க்க முடியும். |
செயல்திறன் | சாத்தியமான சிறந்த அனுபவத்தை உங்களுக்கு வழங்க, குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு: சேவையகங்களுக்கு இடையேயான டிராஃபிக் மற்றும் பல்வேறு பயனர்களுக்கு Workplace சேவைகள் எவ்வளவு விரைவாக ஏற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது போன்றவற்றுக்கு குக்கீகளைப் பயன்படுத்துவோம். உங்கள் திரை மற்றும் சாளரங்களின் விகிதம் மற்றும் அளவுகளைப் பதிவுசெய்து, உயர் ஒளிமாறுபாடு பயன்முறையை இயக்கியுள்ளீர்களா என்று அறிந்து, எங்கள் தளங்களையும் செயலிகளையும் சரியாக வழங்குவதற்கு குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. |
பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி | Workplace சேவைகளை மக்கள் எவ்வறு பயன்படுத்துகிறார்கள் என்று நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை மேம்படுத்துவதற்கு, குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டு: Workplace சேவைகளை மக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்றும் புரிந்து கொண்டு, Workplace சேவைகளின் எந்தெந்த பகுதிகள் அவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது, எந்தெந்த பகுதிகளில் அவர்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் மற்றும் எந்தெந்த அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்று அடையாளம் காண்பதற்கு, குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன. |
என்னென்ன குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்?
உலாவியை மூடும்போது நீக்கப்படும் அமர்வு குக்கீகளையும், காலாவதியாகும் வரை அல்லது அவற்றை நீக்கும் வரை உலாவியில் இருக்கும் நிலையான குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்திகிறோம்.
Workplace சேவைகளில் முதல் தரப்பு குக்கீகளை மட்டுமே நாங்கள் அமைக்கிறோம். Workplace சேவைகளில் மூன்றாம் தரப்பு குக்கீகள் அமைக்கப்படுவதில்லை.
குக்கீகளை நாங்கள் பயன்படுத்துவதை நீங்கள் கட்டுப்படுத்தும் விதம்
கூடுதலாக, உலாவி குக்கீகளை அமைக்கலாமா என்பதைத் தேர்வுசெய்வதற்கும், அவற்றை நீக்குவதற்கும் அனுமதிக்கும் அமைப்புகளை உங்கள் உலாவி அல்லது சாதனம் வழங்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து மேலும் அறிய, உங்கள் உலாவி அல்லது சாதனத்தின் உதவி ஆவணத்தைப் பார்க்கவும். உலாவி குக்கீ பயன்பாட்டை நீங்கள் முடக்கியிருந்தால், Workplace சேவைகளின் சில பகுதிகள் சரியாகச் செயல்படாமல் போகலாம்.
கடைசியாகத் திருத்திய தேதி: ஜூன் 10, 2022