Workplace மார்க்கெட்டிங் தனியுரிமைக் கொள்கை

கடைசியாகத் திருத்தியது: அக்டோபர் 10, 2023
பொருளடக்கம்
  1. சட்டத் தகவல்கள்
  2. நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
  3. உங்களுடைய தகவல்களை எப்படிச் செயலாக்குகிறோம்?
  4. நாங்கள் பகிரும் தகவல்கள்
  5. உங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
  6. உங்கள் தகவல்களைத் தக்கவைத்தல்
  7. எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்
  8. செயலாக்கத்திற்கான எங்கள் அடிப்படை முகாந்திரங்கள்
  9. தனியுரிமைக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
  10. உங்கள் தகவல்களுக்கு யார் பொறுப்பு?
  11. எங்களைத் தொடர்புகொள்ளவும்

1. சட்டத் தகவல்கள்

workplace.com (“தளங்கள்”) (Workplace சேவைகளில் இருந்து தனித்துவமானவை என்ற முறையில்) உட்பட எங்கள் வலைதளங்களை வழங்குவது மற்றும் எங்கள் மார்க்கெட்டிங் மற்றும் பின்னூட்டம் அடிப்படையிலான செயல்பாடுகள் (மொத்தமாக “செயல்பாடுகள்” என்றழைக்கப்படுகின்றன) தொடர்பான எங்கள் தரவு நடைமுறைகளை இந்தத் தனியுரிமைக் கொள்கை (“தனியுரிமைக் கொள்கை”) விவரிக்கிறது. இந்தத் தனியுரிமைக் கொள்கையில், எங்கள் தளங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக உங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தகவல்களை விவரிக்கிறோம். அதன் பின்னர் இந்தத் தகவல்களை எப்படிச் செயலாக்குகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதையும் உங்களிடம் இருக்கக்கூடிய உரிமைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் விவரிக்கிறோம்.
“உங்கள் தகவல்களுக்கு யார் பொறுப்பு?” என்பதில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல இந்தத் தனியுரிமைக் கொள்கையின் கீழ் தனிப்பட்ட தரவைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் பொறுப்பான Meta நிறுவனத்தையே “Meta”, “நாம்”, “எங்கள்” அல்லது “நாங்கள்” வார்த்தைகள் குறிப்பிடுகின்றன.
Workplace சேவைகள்; Workplace தயாரிப்பு, செயலிகள் மற்றும் தொடர்புடைய ஆன்லைன் சேவைகள் உட்பட, (மொத்தமாக "Workplace சேவைகள்" என்றழைக்கப்படுகின்றன) பணியில் கூட்டுப்பணியாற்றவும் தகவல்களைப் பகிரவும் அனுமதிக்கின்ற, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் ஆன்லைன் Workplace தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதற்கு இந்தத் தனியுரிமைக் கொள்கை பொருந்தாது. Workplace சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது என்பது இங்கே காணப்படும் Workplace தனியுரிமைக் கொள்கையால் நிர்வகிக்கப்படுகிறது.

2. நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

உங்களைப் பற்றிய பின்வரும் தகவல்களைச் சேகரிக்கிறோம்:
உங்கள் தொடர்புத் தகவல்கள். உதாரணமாக Workplace உட்பட எங்கள் தயாரிப்புகள் தொடர்பான தகவல்களைக் கோருவது, ஆதாரங்களைப் பதிவிறக்குவது, மார்க்கெட்டிங் மெட்டீரியல்களுக்குப் பதிவுசெய்வது, இலவசச் சோதனையைக் கோருவது அல்லது எங்கள் நிகழ்வுகள் அல்லது கூட்டங்கள் ஒன்றில் பங்கேற்பது ஆகியவற்றை செய்யும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர், வேலை, நிறுவனப் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரிக்கிறோம். உதாரணமாக, இந்தத் தகவல்களை நீங்கள் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், உங்கள் இலவச Workplace சோதனையைத் தொடங்குவதற்கு உங்களால் கணக்கை உருவாக்க முடியாது. உங்கள் நிறுவனக் கணக்கின் நிர்வாகி நீங்கள் எனில், எங்களிடம் இருந்து மார்க்கெட்டிங் தொடர்பான மின்னணு தகவல் தொடர்புகளை பெறுவதற்கு நீங்கள் சம்மதிக்கும்போது உங்கள் தொடர்புத் தகவல்களைச் சேகரிக்கிறோம்.
நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள். எங்களை நீங்கள் தொடர்புகொள்ளும்போது, பிற தகவல்களை எங்களுக்கு நீங்கள் வழங்கக்கூடும். தகவல்களின் வகையானது எதற்காக எங்களைத் தொடர்புகொண்டீர்கள் என்பதன் அடிப்படையிலானது. உதாரணமாக, எங்கள் தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நீங்கள் சிக்கலை எதிர்கொண்டால், உங்கள் சிக்கலைச் சரிசெய்ய உதவியாக இருக்கும் என நீங்கள் கருதும் தகவல்களையும் உங்களைத் தொடர்புகொள்வதற்கான விவரங்களையும் (எ.கா: மின்னஞ்சல் முகவரி) எங்களுக்கு வழங்கக்கூடும். உதாரணமாக, எங்கள் தளத்தின் செயல்பாடு அல்லது பிற சிக்கல்கள் தொடர்பான தகவல்களுடன் நீங்கள் எங்களுக்கு மின்னஞ்சலை அனுப்பக்கூடும். அதுபோலவே, Workplace சேவைகள் தொடர்பாக நீங்கள் எங்களிடம் தகவல்கள் கேட்டால், உதாரணமாக நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் மற்றும் உங்கள் வினவலுக்கு நாங்கள் பதிலளிக்க உதவும் பிற தகவல்களை நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டியிருக்கலாம்.
கருத்துக்கணிப்பு மற்றும் பின்னூட்டத் தகவல்கள். எங்கள் கருத்துக்கணிப்புகள் அல்லது பின்னூட்ட பேனல்கள் ஒன்றில் நீங்கள் விருப்பத்தின்பேரில் பங்கேற்கும்போதும் உங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுகிறோம். உதாரணமாக, பின்னூட்ட பேனலின் பகுதியாக இருப்பதற்குத் தேர்வுசெய்த Workplace வாடிக்கையாளர்களின் சமூகத்தை ஏற்பாடு செய்வது போன்று எங்களுக்காக கருத்துக்கணிப்புகளையும் பின்னூட்ட பேனல்களையும் நடத்துவதற்கு மூன்றாம் தரப்பினர் சேவை வழங்குநர்களுடன் பணியாற்றுகிறோம். இந்த நிறுவனங்கள் உங்கள் வயது, பாலினம், உங்கள் வணிகப் பதவி பற்றிய விவரங்கள் மற்றும் எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் வழிகள் உட்பட சில சூழல்களில் உங்களைப் பற்றி அவர்கள் சேகரிக்கும் தகவல்களை வழங்குகின்றன மற்றும் நீங்கள் வழங்கும் உங்கள் பின்னூட்டத்தை வழங்குகின்றன.
பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள் சேவை தொடர்பான, பிழை கண்டறிதல் போன்ற எங்கள் தளங்களில் உங்கள் செயல்பாடு பற்றிய தகவல்களையும் செயல்திறன் தகவல்களையும் சேகரிக்கிறோம். இதில் உங்கள் செயல்பாடு (எங்கள் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள், உங்கள் செயல்பாடுகளின் நேரம், கால இடைவெளி மற்றும் கால அளவு உள்ளிட்டவை), பதிவு கோப்புகள், பிழை கண்டறிதல், செயலிழப்பு, வலைதளம் மற்றும் செயல்திறன் பதிவுகள் மற்றும் அறிக்கைகள் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கும்.
சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள். எங்கள் தளங்களை நீங்கள் அணுகும்போது அல்லது பயன்படுத்தும்போது சாதனம் மற்றும் இணைப்பு சார்ந்த தகவல்களைச் சேகரிக்கிறோம். வன்பொருள் மாதிரி, இயங்குத்தளத் தகவல்கள், பேட்டரி நிலை, சிக்னல் வலிமை, செயலியின் பதிப்பு, உலாவித் தகவல்கள், அலைபேசி நெட்வொர்க், இணைப்புத் தகவல்கள் (அலைபேசி எண், அலைபேசி ஆப்பரேட்டர் அல்லது ISP உட்பட), மொழி மற்றும் நேர மண்டலம், IP முகவரி, சாதனச் செயல்பாடுகளின் தகவல்கள் மற்றும் அடையாளங்காட்டிகள் (அதே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய Meta நிறுவனத் தயாரிப்புகளுக்குத் தனித்துவமான அடையாளங்காட்டிகள் உட்பட) போன்ற தகவல்கள் இதில் அடங்கும்.
குக்கீகள் எங்கள் தளங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகின்றன. குக்கீ என்பது பயனரின் உலாவிக்கு எங்கள் தளம் அனுப்புகின்ற சிறிய அளவிலான பண்புக்கூறாகும். பயனர் திரும்பி வரும்போது அவரின் கணினி அல்லது சாதனத்தை நாங்கள் கண்டறியும் வகையில் பயனரின் ஹார்டு டிரைவில் இது சேமிக்கப்படக்கூடும். இதே மாதிரியான செயல்பாட்டைக் கொண்ட பிற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம். எங்கள் குக்கீகள் கொள்கையில் எங்கள் Workplace தளத்தில் குக்கீகளையும் இதே மாதிரியான தொழில்நுட்பங்களையும் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறியலாம்.
மூன்றாம் தரப்புத் தகவல்கள். எங்கள் தளங்கள் அல்லது செயல்பாடுகளை இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இங்கே பணியாற்றுகிறோம், உங்களைப் பற்றி அவர்களிடம் தகவல்களைச் சேகரிக்கிறோம்.
Meta நிறுவனங்கள். குறிப்பிட்ட சூழல்களில் பிற Meta நிறுவனங்களுடன் பகிரப்பட்ட கட்டமைப்பு, அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்திடம் இருந்து தகவல்களைச் சேகரிக்கிறோம். ஒவ்வொரு தயாரிப்பின் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்றபடியும் பொருந்தும் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடியும் Meta நிறுவனத் தயாரிப்புகள் முழுவதிலும் உங்கள் சாதனங்களிலும் உங்களைப் பற்றிய தகவல்களையும் செயலாக்குகிறோம்.
Workplace சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது சேகரிக்கப்படும் தகவல்கள், Workplace சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தகவல் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன என்பதை நிர்வகிக்கும் Workplace தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது.

3. உங்களுடைய தகவல்களை எப்படிச் செயலாக்குகிறோம்?

எங்கள் தளங்களையும் செயல்பாடுகளையும் இயக்க, வழங்க, மேம்படுத்த, புரிந்துகொள்ள, தனிப்பயனாக்க மற்றும் ஆதரிக்க எங்களிடம் உள்ள தகவல்களைப் பயன்படுத்துகிறோம் (உங்கள் தேர்வுகள் மற்றும் பொருந்தும் சட்டத்திற்கு உட்பட்டது)
எங்கள் தளத்தையும் செயல்பாடுகளையும் வழங்குதல், மேம்படுத்துதல் மற்றும் உருவாக்குதல்.
எங்கள் தளத்தையும் செயல்பாடுகளையும் வழங்கவும் மேம்படுத்தவும் உருவாக்கவும் உங்கள் தகவல்களைப் பகுப்பாய்வு செய்கிறோம். இதில் எங்கள் தளங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவது, உலாவுவது, மேலும் தகவல்களுக்கு எங்களைத் தொடர்புகொள்வது, கூடுதல் தகவல்களை அணுகுவது மற்றும் இலவச சோதனைகளுக்குப் பதிவுசெய்வது ஆகியவற்றிற்கு உங்களை அனுமதிப்பதும் அடங்கும். இந்தத் தனியுரிமைக் கொள்கையின்படி எங்கள் மார்க்கெட்டிங் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம். நீங்கள் சேர்ந்துள்ள கருத்துக்கணிப்புகள் மற்றும்/அல்லது பின்னூட்ட பேனல்களை வழங்கவும் மேம்படுத்தவும் உருவாக்கவும் உங்கள் தகவல்களையும் பயன்படுத்துவோம்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் மற்றும் விரும்புகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளவும்.
பின்னூட்ட பேனலில் அல்லது பின்னூட்ட ஆய்வுகளில் (உதாரணமாக, புதிய கருத்தாக்கங்களை நீங்கள் பரிசோதித்தல் மற்றும் Workplace அம்சங்களை முன்னோட்டமிடுதல் போன்ற சூழலில்) நீங்கள் பங்கேற்றால், உங்கள் தகவல்களையும் பின்னூட்டத்தையும் கருத்தில் கொள்வோம் மற்றும் பகுப்பாய்வு செய்வோம். வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் மற்றும் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இதைச் செய்கிறோம். உதாரணமாக, Workplace அல்லது பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அம்சங்களை மாற்ற வேண்டுமா அல்லது புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வேண்டுமா என்பதைத் தெரிவித்தல் மற்றும் பிற புள்ளிவிவரங்களைப் பெறுதல். பின்னூட்ட பேனல் அல்லது பிற பின்னூட்ட ஆய்வுகளில் நீங்கள் பங்கேற்றதில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, அடையாளம் அகற்றப்பட்ட படிவத்தில் பயன்படுத்தப்படும். மேலும் பின்னூட்டம் அல்லது புள்ளிவிவரங்களுக்கான அறிக்கையில் மேற்கோளோ உணர்வோ பயன்படுத்தப்பட்டால், அறிக்கையானது உங்களைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாது.
உங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மார்க்கெட்டிங் தகவல்களை அனுப்ப, எங்கள் தளங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக பொதுவாக உங்களைத் தொடர்புகொள்ள மற்றும் பொருந்தும் இடங்களில் எங்கள் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம். எங்களைத் தொடர்புகொள்ளும்போது உங்களுக்குப் பதிலளிப்பதற்காகவும் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவோம்.
எங்கள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துதலை வழங்குதல், தனிப்பட்டதாக மாற்றுதல், அளவிடுதல் மற்றும் மேம்படுத்துதல்.
இலக்கிடப்பட்ட விளம்பரங்களுக்கு உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தக்கூடும். முதல் தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு நெட்வொர்க்குகள் மூலமானவை மற்றும் நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை உருவாக்குவது, முதல் தரப்பு மற்றும் மூன்றாம் விளம்பர நெட்வொர்க்குகளில் அளவிடுவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.
பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல்.
சந்தேகத்திற்குரிய நடத்தையை அடையாளம் காணவும் வடிவங்களை விசாரிக்கவும் உங்கள் சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்களைப் பகுப்பாய்வு செய்கிறோம்.
சட்ட அமலாக்கம் மற்றும் சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பது உட்பட பிறருடன் தகவல்களைப் பராமரித்து, பகிர்தல்.
எடுத்துக்காட்டாக, சில தகவல்களை அணுகுவது, பாதுகாப்பது, வெளிப்படுத்துவது உட்பட சட்டப்பூர்வக் கடமைக்கு நாங்கள் இணங்கும்போது, ஒழுங்குமுறை அமைப்பு, சட்ட அமலாக்கத் துறை அல்லது மற்றவற்றிடம் இருந்து சரியான சட்டப்பூர்வக் கோரிக்கை வந்தால், உங்கள் தகவல்களைச் செயலாக்குவோம். சட்டத்தால் கட்டாயமில்லாதபோதும், தொடர்புடைய சட்ட வரம்பில் உள்ள சட்டத்தின்படி இது தேவைப்படும் என நாங்கள் நன்னம்பிக்கை வைத்திருக்கும் இடங்களில் சட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல் அல்லது தீங்கான அல்லது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை எதிர்ப்பதற்கு சட்ட அமலாக்கத்துறை அல்லது துறை சார்ந்த கூட்டாளர்களுடன் தகவல்களைப் பகிர்வது இதில் அடங்கும். உதாரணமாக, விசாரணையின் நோக்கங்களுக்காக தேவைப்படும் இடத்தில் சட்ட அமலாக்கத்துறையால் கோரிக்கை செய்யப்படும்போது பயனர் தகவல்களின் ஸ்னாப்ஷாட்டை வைத்திருப்போம். சட்ட அறிவுரையை நாங்கள் நாடும்போது அல்லது வழக்காடல் மற்றும் பிற முறையிடல் சூழலில் எங்களது பாதுகாப்பை நாடும்போது தகவல்களைப் பராமரித்து, பகிர்கிறோம். எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் மீறல்கள் போன்ற விஷயங்களும் இதில் அடங்கும். சில சூழல்களில், சட்டத்தால் தேவைப்படும்போது எங்களுக்கு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் இருப்பது, பொருந்தும் சட்டத்தை நீங்களும் Metaவும் மீற காரணமாகக்கூடும்.

4. நாங்கள் பகிரும் தகவல்கள்

நாங்கள் வழங்கும் தகவல்களைக் கூட்டாளர்களும் மூன்றாம் தரப்பினரும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக்கூடாது, வெளியிட வேண்டும் ஆகியவற்றைப் பற்றிய விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். நாங்கள் எவருடன் தகவல்களைப் பகிர்கிறோம் என்பதற்கான கூடுதல் தகவல்கள் இதோ:
மூன்றாம் தரப்பு கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்: எங்கள் தளங்களையும் செயல்பாடுகளையும் எடுத்துக்கொள்வதற்கு எங்களுக்கு உதவிட மூன்றாம் தரப்புக் கூட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். அவர்கள் எவ்வாறு எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள் அல்லது எங்களுடன் பணியாற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையில், இந்த அளவில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் நாங்கள் தகவல்களைப் பகிரும்போது, எங்கள் வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப எங்கள் சார்பாக உங்கள் தகவல்களை அவர்கள் பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டிங், பகுப்பாய்வுகள், கருத்துக்கணிப்புகள், பின்னூட்ட பேனல்கள் ஆகியவற்றில் எங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துபவர்கள் என வெவ்வேறு வகைகளிலான கூட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் பணியாற்றுகிறோம்.
Meta நிறுவனங்கள்: எங்கள் செயல்பாடுகள் தொடர்பான அல்லது எங்கள் தளங்கள், கட்டமைப்புகள், சிஸ்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக நாங்கள் சேகரிக்கும் தகவல்களை பிற Meta நிறுவனங்களுடன் பகிர்வோம். பகிர்வது என்பது பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க எங்களுக்கு உதவுகிறது; சலுகைகளையும் விளம்பரங்களையும் தனிப்பட்டதாக மாற்றுகிறது; பொருந்தும் சட்டங்களுடன் இணக்கமாக்குகிறது; அம்சங்களையும் ஒருங்கிணைப்புகளையும் உருவாக்குகிறது மற்றும் வழங்குகிறது; அத்துடன் Meta நிறுவனத் தயாரிப்புகளைப் பயனர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் மற்றும் செயலை மேற்கொள்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள பயன்படுகிறது.
சட்டம் மற்றும் இணக்கத்தன்மை: (i) தேடல் ஆணைகள், நீதிமன்ற ஆணைகள், வெளியிடல் ஆணைகள் அல்லது சம்மன்கள் போன்ற சட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் உங்கள் தகவல்களை நாங்கள் அணுகலாம், பராமரிக்கலாம், பயன்படுத்தலாம் மற்றும் பகிரலாம். இந்தக் கோரிக்கைகள் சிவில் வழக்குகள், சட்ட அமலாக்க மற்றும் பிற அரசாங்க அதிகாரிகள் போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து வரக்கூடியவையாக இருக்கும். மேலும் அத்தகைய கோரிக்கைகளை விசாரிக்கவும் பதிலளிக்கவும் எங்களுக்கு உதவும் பிற Meta நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பினர் உட்பட பிற நிறுவனங்களுக்கும் (ii) பொருந்தும் சட்டத்தின்படியும் (iii) Meta தயாரிப்புகள், பயனர்கள், ஊழியர்கள், சொத்து மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும் உங்கள் தகவல்களைப் பகிரக்கூடும். ஒப்பந்த மீறலை விசாரித்தல், எங்கள் விதிமுறைகள் அல்லது கொள்கைகளின் விதிமீறல்கள் அல்லது சட்டத்தை மீறுதல், மோசடியைக் கண்டறிதல், சரிசெய்தல் அல்லது தடுத்தல் ஆகிய நோக்கங்களும் இதில் அடங்கும். சட்ட க்ளைம்களின் நிறுவல், செயல்படுத்தல் அல்லது பாதுகாத்தலுக்கு தேவைப்படும் இடங்களிலும் நபர்களுக்கோ சொத்திற்கோ உண்மையான அல்லது சந்தேகப்படுகிற இழப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ளதா என விசாரிக்க அல்லது அவற்றைத் தடுக்க உங்கள் தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படக்கூடும்.
வணிகத்தின் விற்பனை: எங்கள் வணிகத்தை முழுமையாகவோ பகுதியளவாகவோ நாங்கள் விற்றால் அல்லது பரிமாற்றினால், பொருந்தும் சட்டத்திற்கு உட்பட்டு அந்தப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக உங்கள் தகவல்களை புதிய உரிமையாளருக்கு நாங்கள் வழங்கக்கூடும்.

5. உங்கள் உரிமைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?

பொருந்தும் சட்டம் மற்றும் உங்கள் வசிப்பிடத்தைப் பொறுத்து, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உங்களுக்கு உரிமைகள் உள்ளன. சில உரிமைகள் பொதுவாகவே பயன்பாட்டில் இருக்கும் என்றபோதும், சில உரிமைகள் குறிப்பிட்ட சூழல்களிலோ சில நீதிமன்ற அதிகார வரம்புகளிகளோ மட்டுமே கிடைக்கும். இங்கே எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் உரிமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • அணுகுவதற்கான/அறிவதற்கான உரிமை - உங்கள் தகவல்களுக்கு அணுகலைக் கோர உங்களுக்கு உரிமை உள்ளது மற்றும் நாங்கள் சேகரிக்கும், பயன்படுத்தும் வெளியிடும் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் வகைகள் மற்றும் எங்கள் தரவு நடைமுறைகளைப் பற்றிய தகவல்கள் உட்பட சில தகவல்களின் நகலைப் பெறவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
  • சரிசெய்வதற்கான உரிமை - உங்களைப் பற்றிய துல்லியமற்ற தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சரிசெய்ய கோருவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது.
  • அழிப்பதற்கான/நீக்கக் கோருவதற்கான உரிமை - முறையான காரணங்கள் இருக்கும்பட்சத்திலும், பொருந்தும் சட்டத்திற்கு உட்பட்டும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை சில சூழல்களில் நீக்குவதற்கு கோரிக்கை செய்யவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
  • தரவை நகர்த்துவதற்கான உரிமை - சில சூழல்களில் உங்கள் தகவல்களை ஒழுங்கமைக்கப்பட்ட, பொதுவாகப் பயன்படும் மற்றும் இயந்திரத்தால் வாசிக்கக்கூடிய வடிவில் பெறவும், மற்றொரு கட்டுப்பாட்டாளருக்கு அத்தகைய தகவல்களைப் பரிமாற்றவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
  • (மார்க்கெட்டிங்கிற்கு) மறுப்புத் தெரிவிப்பதற்கான/வெளியேறுவதற்கான உரிமை - நேரடி மார்க்கெட்டிங், சுயவிவரப்படுத்துதல் மற்றும் தானியங்கு முடிவெடுக்கும் நோக்கங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மறுப்புத் தெரிவிக்கும் உரிமை. நேரடி மார்க்கெட்டிங்கிற்கு உங்கள் தகவல்களை நாங்கள் பயன்படுத்தினால், அத்தகைய தகவல் தொடர்புகளில் உள்ள சந்தா விலகுதல் இணைப்பைப் பயன்படுத்தி எதிர்கால் நேர சந்தைப்படுத்தும் மெசேஜ்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவும் வெளியேறவும் உங்களுக்கு உரிமை உள்ளது.
  • மறுப்புத் தெரிவிப்பதற்கான உரிமை - உங்கள் தகவல்களின் குறிப்பிட்ட செயலாக்கத்திற்கு வரம்பிடவும் மறுப்புத் தெரிவிக்கவும் உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்குவது நியாயமான நலன்களைச் சார்ந்துள்ளபோது அல்லது பொது நலனிற்காக செயல்படுத்தும்போது மறுப்புத் தெரிவிக்கலாம். மறுப்பை ஆராயும்போது பல காரணிகளைக் கருத்தில் எடுத்துக்கொள்வோம், அதில் பின்வருபவை அடங்கும்: உங்களின் ஆர்வங்கள் அல்லது அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை விட குறைவான முக்கியத்துவம் கொண்ட இந்தச் செயலாக்கத்திற்கான கட்டாய நியாயமான ஆதாரங்கள் எங்களிடம் இல்லை எனில் அல்லது முறையான காரணங்களுக்காக செயலாக்கம் தேவைப்படுகிறது என்றால் உங்களின் ஆட்சேபனை உறுதிப்படுத்தப்படும் மற்றும் உங்களின் தகவல்களைச் செயலாக்குவதை நிறுத்திவிடுவோம். எங்களது மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளில் உள்ள “சந்தா விலகுக” இணைப்பைப் பயன்படுத்துவதன் மூலமும் உங்கள் தகவல்களை நேரடி மார்க்கெட்டிங்கிற்கு பயன்படுத்துவதை கூடுதலாக நீங்கள் தடுக்கலாம்.
    • உங்கள் முறையான எதிர்பார்ப்புகள்
    • உங்களுக்கோ, எங்களுக்கோ, பிற பயனர்களுக்கோ மூன்றாம் தரப்பினர்களுக்கோ இருக்கக்கூடிய பலன்கள் மற்றும் ஆபத்துகள்
    • ஆக்கிரமிப்பு சற்றே குறைவாக இருக்கக்கூடிய மற்றும் விகிதாசாரமற்ற முயற்சி தேவைப்படாத அதே இலக்கை அடைவதற்கான பிற வழிகள்
  • உங்கள் ஒப்புதலைத் திரும்பப்பெறுவதற்கான உரிமை - சில செயலாக்கச் செயல்பாடுகளுக்காக உங்களிடம் ஒப்புதலைப் பெற்ற இடங்களில், எப்போது வேண்டுமானாலும் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது. ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் செயலாக்கமானது சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என்பதால், ஒப்புதலால் அவை பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • புகாரளிப்பதற்கான உரிமை - உங்களின் உள்ளூர் மேற்பார்வை அதிகாரியிடம் நீங்கள் புகாரளிக்கலாம். Meta Platforms Ireland Limited இன் தலைமை மேற்பார்வை ஆணையம் என்பது அயர்லாந்து தரவுப் பாதுகாப்பு ஆணையமாகும்.
  • பாகுபாட்டிற்கு எதிரான உரிமை: இந்த உரிமைகள் எதையாவது நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்களிடம் பாகுபாடு காட்ட மாட்டோம்.
உங்கள் தகவல்களையும் எங்கள் மார்க்கெட்டிங் சேவைகளின் ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பதற்கு, உங்கள் கோரிக்கையைச் செயலாக்குவதற்கு முன்பாக உங்கள் அடையாளத்தை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டியிருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும். சில சூழல்களில், உங்கள் அடையாளத்தை உறுதிசெய்வதற்கு சில சட்ட அதிகார எல்லைகளில் அரசாங்கம் வெளியிட்ட அடையாளச்சான்று போன்ற கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டியிருக்கலாம். சில சட்டங்களின் கீழ், இந்த உரிமைகளை நீங்களே உபயோகிக்கலாம் அல்லது உங்கள் சார்பாக இந்தக் கோரிக்கைகளைச் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவரை நீங்கள் ஒதுக்கலாம்.
பிரேசில் நாட்டின் பொது தரவுப் பாதுகாப்புச் சட்டம்
இந்தப் பிரிவானது பிரேசில் சட்டத்தின் கீழ் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கும் செயல்பாடுகளுக்குப் பொருந்துகின்றது மற்றும் இந்தத் தனியுரிமைக் கொள்கையை ஆதரிக்கின்றது.
பிரேசில் நாட்டின் பொது தரவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (“LGPD”), உங்கள் தரவை அணுக, திருத்த, அனுப்ப, அழிக்க மற்றும் உங்கள் தரவை நாங்கள் செயலாக்குவதை உறுதிப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. சில சூழ்நிலைகளில், உங்களின் தனிப்பட்ட தகவல்களின் செயலாக்கத்தை மறுப்பதற்கும் வரம்பிடுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு, அல்லது உங்கள் ஒப்புதலின் அடிப்படையில் நீங்கள் எங்களுக்கு வழங்கிய தரவை நாங்கள் செயலாக்கும்போது உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மூன்றாம் தரப்பினருடன் தரவை நாங்கள் எவ்வாறு பகிர்கிறோம் என்பது பற்றிய தகவல்களை இந்தத் தனியுரிமைக் கொள்கை வழங்குகிறது. எங்களின் தரவு நடைமுறைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கோருவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
DPAஐ நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் பிரேசில் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடம் மனு கொடுக்க உங்களுக்கு உரிமை உண்டு.

6. உங்கள் தகவல்களைத் தக்கவைத்தல்

இந்தத் தனியுரிமைக் கொள்கையில் விவரித்துள்ள நோக்கங்களுக்குத் தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை வைத்திருப்போம். பகுப்பாய்வுகளை நடத்துவது, சகப் பணியாளர் மதிப்பாய்விற்குப் பதிலளிப்பது அல்லது பின்னூட்டத்தைச் சரிபார்ப்பது ஆகியவற்றிற்குத் தேவைப்படுவதைப் பொறுத்து திட்டத்தின் கால அளவு வரையிலும் அதற்குப் பிறகும் பின்னூட்ட பேனலிலோ பின்னூட்ட ஆய்வுகளிலோ நீங்கள் பங்கேற்றபோது நாங்கள் சேகரித்த தகவல்களை Meta தக்கவைத்துக்கொள்ளும். எங்கள் சட்ட கடமைகளுடன் இணக்கமாக இருப்பதற்கும் (உதாரணமாக, பொருந்தும் சட்டத்தின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருக்க வேண்டுமெனில்) முறையிடல்களைச் சரிசெய்யவும் விதிமுறைகளைச் செயல்படுத்தவும் தேவையான அளவிற்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களை Meta தக்கவைக்கும் மற்றும் பயன்படுத்தும். இந்தத் தக்கவைப்பிற்கான காலம் முடிந்த பிறகு, அந்தத் தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்க எங்களுக்குக் கூடுதலாக குறிப்பிட்ட காரணம் இல்லை என்றால் தொடர்புடைய தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படும்.

7. எங்கள் உலகளாவிய செயல்பாடுகள்

உலகளவில் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எங்கள் அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களுடனும், வெளிப்புறமாக எங்கள் விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள், மூன்றாம் தரப்பினர் ஆகியோருடனும் பகிர்வோம். ஏனெனில் பயனர்கள், கூட்டாளர்கள், பணியாளர்கள் ஆகியோருடன் Meta உலகளாவியதாக இருப்பதால் பின்வருபவை உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பரிமாற்றம் முக்கியமானதாக உள்ளது:
  • இதன் மூலம் இந்தத் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளை எங்களால் செயல்படுத்தவும் வழங்கவும் முடிகின்றது
  • இதனால் இந்தத் தனியுரிமைக் கொள்கைக்கு ஏற்ப, எங்கள் தயாரிப்புகளை நாங்கள் சரிசெய்யலாம், பகுப்பாய்வு செய்யலாம் மற்றும் மேம்படுத்தலாம்
தகவல்கள் எங்கே பரிமாற்றப்படும்?
உங்கள் தகவல்கள் இவற்றுக்குப் பரிமாற்றப்படும்/அனுப்பப்படும் அல்லது இவற்றில் சேமிக்கப்பட்டுச் செயலாக்கப்படும்:
  • அமெரிக்கா, அயர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகள் உட்பட எங்கள் அலுவலகங்கள் அல்லது தரவு மையங்கள் இருக்கும் இடங்கள்
  • Workplace கிடைக்கும் நாடுகள்
  • இந்தத் தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே அத்துடன் எங்கள் விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள், மூன்றாம் தரப்பினர் ஆகியோர் இருக்கும் பிற நாடுகள்.
உங்கள் தகவல்களை நாங்கள் பாதுகாப்பது எப்படி?
சர்வதேசத் தரவுப் பரிமாற்றத்திற்குப் பொருத்தமான நுட்பங்களைச் சார்ந்துள்ளோம்.
உலகளாவிய தரவு பரிமாற்றங்களுக்கு நாங்கள் பயன்படுத்தும் நுட்பங்கள்
சர்வதேசத் பரிமாற்றங்களுக்குப் பொருத்தமான நுட்பங்களைச் சார்ந்துள்ளோம். உதாரணத்திற்கு, நாங்கள் சேகரிக்கும் தகவல்களுக்கு:
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி
  • தனிப்பட்ட தரவிற்குப் போதுமான அளவு பாதுகாப்பை வழங்குவதை ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு வெளியிலுள்ள சில நாடுகளும் பிராந்தியங்களும் உறுதிப்படுத்துகின்றன எனும் அடையாளங்காணும் ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுகளைச் சார்ந்துள்ளோம். “தேவையான முடிவுகள்” என இந்த முடிவுகள் குறிப்பிடப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்களைத் தொடர்புடைய தேவையான முடிவுகளின் அடிப்படையில் அர்ஜென்டினா, இஸ்ரேல், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கும், தீர்மானம் பொருந்தும் இடங்களில் கனடாவிற்கும் பரிமாற்றுவோம். ஒவ்வொரு நாட்டிற்குமான தேவையான முடிவுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள். Meta Platforms, Inc. நிறுவனமானது EU-அமெரிக்கத் தரவுத் தனியுரிமைச் சட்டத்தில் பங்குகொள்வதாகச் சான்றளித்துள்ளது. சான்றளிப்பில் குறிப்பிட்டுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்காகத் தகவல்களைப் பரிமாற்ற, EU-அமெரிக்கத் தரவுத் தனியுரிமைச் சட்டத்தையும் ஐரோப்பிய ஆணையத்தின் தொடர்புடைய தேவையான முடிவையும் சார்ந்திருக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, Meta Platforms, Inc. நிறுவனத்தின் தரவுத் தனியுரிமைச் சட்ட வெளியிடலைப் படிக்கவும்.
  • பிற சூழல்களில், ஐரோப்பிய ஆணையம் அனுமதி வழங்கிய நிலையான ஒப்பந்த விதிகளையோ (பொருத்தமான இடத்தில் UKக்கான சமமான நிலையான ஒப்பந்த விதிகள்) மூன்றாம் தரப்புக்குத் தகவல்களைப் பரிமாற்ற பொருந்தும் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தரம் குறைப்பு நடவடிக்கைகளையோ சார்ந்துள்ளோம்.
எங்களின் சர்வதேசத் தரவுப் பாரிமாற்றங்கள், வழக்கமான ஒப்பந்த விதிகள் ஆகியவை தொடர்பாக ஏதேனும் கேள்விகளுக்கு, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரியா
உங்களுக்கான தனியுரிமைகள் பற்றியும் உங்கள் தகவல்களை நாங்கள் பகிர்கின்ற மூன்றாம் தரப்பினர்களைப் பற்றிய விவரங்களையும் பிற விஷயங்களையும் மேலும் அறிவதற்கு எங்கள் கொரியாவின் தனியுரிமை அறிக்கையைப் பார்க்கவும்.
ROW:
  • பிற சூழல்களில், ஐரோப்பிய ஆணையம் அனுமதி வழங்கிய நிலையான ஒப்பந்த விதிகளையோ (பொருத்தமான இடத்தில் UKக்கான சமமான நிலையான ஒப்பந்த விதிகள்) மூன்றாம் தரப்புக்குத் தகவல்களைப் பரிமாற்ற பொருந்தும் சட்டத்தின்படி வழங்கப்பட்ட தரம் குறைப்பு நடவடிக்கைகளையோ சார்ந்துள்ளோம்.
  • பிற நாடுகளில் போதுமான அளவு தரவுப் பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் மற்றும் தகுந்த பிற அதிகாரிகளின் தீர்மானங்களைச் சார்ந்துள்ளோம்.
  • அமெரிக்கா மற்றும் தகுந்த பிற நாடுகளுக்குத் தரவுப் பரிமாற்றத்திற்குப் பொருந்தும் தொடர்புடைய சட்டங்களின்படி ஈடான நுட்பங்களைப் பயன்படுத்துவோம்.
உங்கள் தகவல்களைப் பரிமாற்றம் செய்யும்போதெல்லாம் அதற்குப் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் நாங்கள் உறுதிசெய்துகொள்வோம். உதாரணமாக, உங்கள் தகவல்கள் பொது நெட்வொர்க் மூலம் அனுப்பப்படும்போது, அங்கீகாரம் இல்லாமல் அவற்றை அணுகுவதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அவற்றை நாங்கள் மறையாக்கம் செய்வோம்.

8. செயலாக்கத்திற்கான எங்கள் சட்ட அடிப்படைகள்

பொருந்தக்கூடிய சில தரவுப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், தரவைச் செயலாக்க நிறுவனங்கள் சட்ட அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும். “தனிப்பட்ட தரவைச் செயலாக்குதல்” என்பது, மேலே உள்ள இந்தத் தனியுரிமைக் கொள்கையின் கீழ் உள்ள பிற பிரிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல உங்கள் தகவல்களை நாங்கள் சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் பகிர்வதைக் குறிக்கிறது.
எங்களது சட்ட அடிப்படை என்பது என்ன?
உங்கள் சட்ட அதிகார எல்லை மற்றும் சூழல்களின் அடிப்படையில், இந்தத் தனியுரிமை கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு உங்களது தகவல்களைச் செயலாக்குவதற்கான வெவ்வேறு சட்ட அடிப்படைகளைச் சார்ந்துள்ளோம். சூழல்களின் அடிப்படையில், வெவ்வேறு காரணங்களுக்காக உங்களது ஒரே மாதிரியான தகவல்களைச் செயலாக்கும்போது வெவ்வேறு சட்ட அடிப்படைகளையும் நாங்கள் சார்ந்திருக்கக்கூடும். சில சட்ட அதிகார எல்லைகளில், உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்குவதற்கு உங்கள் ஒப்புதலையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறோம். ஐரோப்பிய பிராந்தியம் உட்பட பிற சட்ட அதிகார எல்லைகளில், கீழே உள்ள சட்ட அடிப்படைகளைச் சார்ந்துள்ளோம். கீழே உள்ள ஒவ்வொரு சட்ட அடிப்படைக்கும் உங்கள் தகவல்களை எதற்காகச் செயலாக்குகிறோம் என்பதை விவரித்துள்ளோம்.
நியாயமான நலநோக்கங்கள்
உங்கள் விருப்பங்களோ அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களோ (“நியாயமான நலநோக்கங்கள்”), எங்களது முறையான விருப்பங்களை அல்லது மூன்றாம் தரப்பின் முறையான விருப்பங்களை மாற்றாது:
உங்களுடைய தகவல்களை ஏன், எப்படிச் செயலாக்குகிறோம்?இவற்றைச் சார்ந்துள்ள நியாயமான நலநோக்கங்கள்:பயன்படுத்தப்பட்ட தகவல் வகைப்பிரிவுகள்
எங்கள் தளத்தையும் செயல்பாடுகளையும் வழங்குவது, மேம்படுத்துவது மற்றும் உருவாக்குவது.
உங்கள் தகவல்கள் மற்றும் எங்கள் தளத்தை நீங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் எங்கள் செயல்பாடுகளுடன் ஈடுபடும் விதத்தைப் பகுப்பாய்வு செய்வது.
எங்கள் தளச் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும் எங்கள் தளத்தை மேம்படுத்தவும் எங்கள் நலனுக்காக இது மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அவற்றை உருவாக்கி, மேம்படுத்தவும் எங்கள் நலனுக்காக மார்க்கெட்டிங் மற்றும் பின்னூட்டச் செயல்பாடுகள் வழங்கப்படுகின்றன.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்
பயனர்களுக்கு என்ன வேண்டும் மற்றும் என்ன விரும்புவார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு:
நீங்கள் பின்னூட்ட பேனல் மற்றும் பிற பின்னூட்ட ஆய்வுகளில் பங்கேற்றால் உங்கள் தகவல்களையும் பின்னூட்டத்தையும் பகுப்பாய்வு செய்தல் உட்பட, எங்கள் செயல்பாடுகளை வழங்குகிறோம். உதாரணமாக, புதிய கருத்தாக்கங்களை நீங்கள் சோதிக்கலாம் மற்றும் Workplace அம்சங்களை முன்னோட்டமிடலாம்.
பின்னூட்ட பேனல் அல்லது பிற பின்னூட்ட ஆய்வுகளில் நீங்கள் பங்கேற்றதில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, அடையாளம் அகற்றப்பட்ட படிவத்தில் பயன்படுத்தப்படும். மேலும் பின்னூட்டம் அல்லது புள்ளிவிவரங்களுக்கான அறிக்கையில் மேற்கோளோ உணர்வோ பயன்படுத்தப்பட்டால், அறிக்கையானது உங்களைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாது.
எங்கள் நலனுக்காகவும் வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் மற்றும் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிகிறோம். மேலும் Workplace அல்லது பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அம்சங்களை மாற்ற வேண்டுமா அல்லது புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வேண்டுமா என்பதைத் தெரிவிக்கவும் பிற புள்ளிவிவரங்களைப் பெறவும் இதைப் பயன்படுத்துகிறோம்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்
உங்களுடன் தகவல்களைப் பரிமாற்றிக்கொள்ளவும் மார்க்கெட்டிங் தகவல்கள் தொடர்புகளை அனுப்பவும் (ஒப்புதல் தேவை இல்லாத இடங்களில்).
செய்திமடல்கள் போன்ற மின்னஞ்சல் மார்க்கெட்டிங் தகவல் தொடர்புகளைப் பெறுவதற்கு நீங்கள் பதிவுசெய்திருந்தால், "சந்தா விலகுக" என்ற இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் நீங்கள் சந்தா விலகலாம்.
தொடர்புடைய இடங்களில் எங்கள் செயல்பாடுகளைப் பற்றியும் கொள்கைகள் மற்றும்/அல்லது விதிமுறைகளைப் பற்றியும் தகவல்களை வழங்குகிறோம்.
எங்களை நீங்கள் தொடர்புகொள்ளும்போது உங்களுக்கு பதிலையும் வழங்குகிறோம்.
எங்கள் நலனுக்காக எங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தவும் ஆர்வமுல் புதிய அல்லது புதுப்பித்த தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களை வழங்கவும் நேரடி மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை அனுப்புகிறோம்.
எங்கள் நலனுக்காக எங்களது செயல்பாடுகளைப் பற்றி உங்களிடம் தெரிவிக்கிறோம்.
எங்கள் நலனுக்காகவும் உங்கள் நலனுக்காகவும் எங்களை நீங்கள் தொடர்புகொள்ளும்போது உங்களுக்குப் பதிலளிக்க உங்கள் தகவல்களைப் பயன்படுத்துகிறோம்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
எங்கள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துதலை வழங்குவதற்கும், தனிப்பட்டதாக மாற்றுவதற்கும், அளவிடுவதற்கும், மேம்படுத்துவதற்கும் நாங்கள்:
இலக்கிடப்பட்ட விளம்பரங்களுக்கு உங்கள் தகவல்களை பயன்படுத்துகிறோம். முதல் தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு நெட்வொர்க்குகள் மூலமானவை மற்றும் நடப்பு பார்வையாளர்களைப் போன்றவர்களை உருவாக்குவது, முதல் தரப்பு மற்றும் மூன்றாம் விளம்பர நெட்வொர்க்குகளில் அளவிடுவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.
எங்கள் நலனுக்காகவே மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துதல் செயல்பாடுகளை மேற்கொள்கிறோம்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • குக்கீகள்
பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் விதமாக நாங்கள்:
சந்தேகத்திற்குரிய நடத்தையை அடையாளம் காணவும் வடிவங்களை விசாரிக்கவும் உங்கள் சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்களைப் பகுப்பாய்வு செய்கிறோம்.
எங்கள் நலனுக்காகவும் எங்கள் தளத்தின் பயனர்களின் நலனுக்காகவும் எங்கள் மார்க்கெட்டிங் மற்றும் பின்னூட்ட செயல்பாடுகளில் பங்கேற்பவர்களின் நலனுக்காகவும் தொடர்புடைய அமைப்புகளைப் பாதுகாக்கிறோம் மற்றும் ஸ்பேம், அச்சுறுத்தல்கள், தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல் செயல்பாடுகளை எதிர்க்கிறோம் மற்றும் தளங்களிலும் செயல்பாடுகளிலும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறோம்.
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • குக்கீகள்
சட்ட அமலாக்கத்துறை உட்பட பிறருக்காகவும் சட்டக் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்காகவும் தகவல்களைப் பராமரித்து, பகிர்கிறோம்.
சட்டத்தால் கட்டாயமில்லாதபோதும், தொடர்புடைய சட்ட வரம்பில் உள்ள சட்டத்தின்படி இது தேவைப்படும் என நாங்கள் நன்னம்பிக்கை வைத்திருக்கும் இடங்களில் சட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல் அல்லது தீங்கான அல்லது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை எதிர்ப்பதற்கு சட்ட அமலாக்கத்துறை அல்லது துறை சார்ந்த கூட்டாளர்களுடன் தகவல்களைப் பகிர்வது இதில் அடங்கும். உதாரணமாக, விசாரணையின் நோக்கங்களுக்காக தேவைப்படும் இடத்தில் சட்ட அமலாக்கத்துறையால் கோரிக்கை செய்யப்படும்போது பயனர் தகவல்களின் ஸ்னாப்ஷாட்டை வைத்திருப்போம்.
எங்கள் நலனுக்காகவும் எங்கள் பயனர்களின் நலனுக்காகவும் மோசடி, எங்கள் தளங்கள் மற்றும் செயல்பாடுகளின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடு, எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் மீறல்கள் அல்லது பிற தீங்குவிளைவிக்கும் அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்பாட்டைத் தடுக்கிறோம் மற்றும் சரிசெய்கிறோம்.
எங்கள் நலனுக்காக விசாரணைகள் அல்லது ஒழுங்குமுறை விசாரணைகள் உள்ளிட்டவற்றில் எங்களை (எங்கள் உரிமைகள், அதிகாரிகள், சொத்து அல்லது தயாரிப்புகள் உட்பட) எங்கள் பயனர்களை அல்லது பிறரை பாதுகாக்கிறோம்; அல்லது இறப்பு அல்லது உடனடி உடல் காயம் ஏற்படுவதைத் தடுக்கிறோம்.
தொடர்புடைய சட்ட அமலாக்கத்துறை, அரசாங்கம், ஆணையங்கள் மற்றும் துறை சார்ந்த கூட்டாளர்கள் தீங்கிழைக்கும் அல்லது சட்டத்திற்குப் புறம்பான நடத்தையை விசாரிப்பதிலும் எதிர்ப்பதிலும் உண்மையான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்
சட்ட அறிவுரையை நாங்கள் நாடும்போது அல்லது வழக்காடல் மற்றும் பிற முறையிடல் சூழலில் எங்களது பாதுகாப்பை நாடும்போது தகவல்களைப் பராமரித்து, பகிர்கிறோம். பொருந்தும் இடங்களில் எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் மீறல்கள் போன்ற விஷயங்களும் இதில் அடங்கும்.
எங்கள் நலனுக்காகவும் எங்கள் பயனர்களின் நலன்களுக்காகவும் புகார்களுக்குப் பதிலளிக்கிறோம், மோசடி, எங்கள் தளங்கள் மற்றும் செயல்பாடுகளின் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு, பொருந்தும் இடங்களில் எங்களது பொருந்தும் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளின் மீறல்கள் அல்லது பிற தீங்குவிளைவிக்கும் அல்லது சட்டத்திற்குப் புறம்பான செயல்பாட்டைத் தடுக்கிறோம் மற்றும் சரிசெய்கிறோம்.
எங்கள் நலனுக்காக விசாரணைகள் அல்லது ஒழுங்குமுறை விசாரணைகள் மற்றும் வழக்காடல் மற்றும் பிற முறையிடல் சூழல்கள் உள்ளிட்டவற்றில் எங்களை (எங்கள் உரிமைகள், அதிகாரிகள், சொத்து அல்லது தயாரிப்புகள் உட்பட) எங்கள் பயனர்களை அல்லது பிறருக்கு சட்ட அறிவுரையைக் கேட்டு, பாதுகாக்கிறோம்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்
உங்கள் ஒப்புதல்
எங்களுக்கு உங்கள் ஒப்புதலை வழங்கும்போது கீழே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக தகவல்களைச் செயலாக்குகிறோம். பயன்படுத்தப்படும் தகவல்களின் வகைகள் மற்றும் ஏன், எப்படி செயலாக்கப்படுகின்றன என்பது பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
உங்களுடைய தகவல்களை ஏன், எப்படிச் செயலாக்குகிறோம்?பயன்படுத்தப்பட்ட தகவல் வகைப்பிரிவுகள்
மார்க்கெட்டிங் தகவல்தொடர்புகளை அனுப்புவதற்கு (உங்கள் பொறுத்து அமையும் இடத்தில்), உங்கள் ஒப்புதலைப் பொறுத்து உங்கள் தகவல்களை நாங்கள் செயலாக்கும்போது, செயலாக்கத்தின் சட்டத்தன்மையைப் பாதிக்காமல் எந்த நேரத்திலும் உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது, அதற்கு முன்பாக கீழே உள்ள தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும்.
ஒவ்வொரு மின்னஞ்சலின் கீழே சேர்க்கப்பட்டுள்ள "சந்தா விலகுக" இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் தகவல் தொடர்புகளில் இருந்து நீங்கள் சந்தாவிலகலாம்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
சட்ட கடமையுடன் இணங்குதல்
எடுத்துக்காட்டாக, சரியான சட்டக் கோரிக்கை உள்ளது சட்டக் கடமைக்கு இணங்குவதற்காக சில தகவல்களை அணுகுவது, பாதுகாப்பது, வெளிப்படுத்துவது உட்பட தகவல்களைச் செயலாக்குகிறோம்.
உங்களுடைய தகவல்களை ஏன், எப்படிச் செயலாக்குகிறோம்?பயன்படுத்தப்பட்ட தகவல் வகைப்பிரிவுகள்
சட்டப்பூர்வக் கடமைக்கு நாங்கள் இணங்கும்போது தகவல்களைச் செயலாக்குவதற்கு, உதாரணமாக ஒழுங்குமுறை அமைப்பு, சட்ட அமலாக்கத் துறை அல்லது மற்றவற்றிடம் இருந்து சரியான சட்டப்பூர்வக் கோரிக்கை வந்தால் சில தகவல்களை அணுகுவது, பாதுகாப்பது, வெளிப்படுத்துவது உள்ளிட்டவை. உதாரணமாக, உங்கள் IP முகவரி போன்ற விசாரணை தொடர்பாக தகவல்களை வழங்குவதற்கு அயர்லாந்து சட்ட அமலாக்கத்துறையின் தேடல் ஆணை அல்லது வெளியிடல் ஆணைகள்.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்
உங்களது அல்லது பிற நபரின் முக்கிய ஆர்வங்களைப் பாதுகாத்தல்
வேறொருவரின் முக்கிய நலன்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும்போது தகவல்களைச் செயலாக்குகிறோம்.
உங்களுடைய தகவல்களை ஏன், எப்படிச் செயலாக்குகிறோம்?பயன்படுத்தப்பட்ட தகவல் வகைப்பிரிவுகள்
அவசரகால சூழ்நிலைகள் போன்ற ஒருவரின் முக்கிய நலன்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் சூழ்நிலைகளில், சட்ட அமலாக்கம் மற்றும் பிறவற்றுடன் தகவல்களைப் பகிர்கிறோம். உங்களது அல்லது வேறொருவரின் வாழ்க்கைப் பாதுகாப்பு, ஆரோக்கியம் அல்லது மன நலன், நல்வாழ்வு அல்லது நன்மதிப்பு அல்லது மற்றவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த மிக முக்கிய நலன்கள் உள்ளடக்குகின்றன.
  • உங்கள் தொடர்புத் தகவல்கள்
  • நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள்
  • சாதனம் மற்றும் இணைப்பின் தகவல்கள்
  • பயன்பாடு மற்றும் பதிவு தகவல்கள்
  • மூன்றாம் தரப்புத் தகவல்கள்
  • குக்கீகள்

9. தனியுரிமைக் கொள்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் திருத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம். புதிய தனியுரிமைக் கொள்கையை நாங்கள் பதிவிடுவோம், மேலே “கடைசியாக திருத்தியது” எனும் தேதியை மாற்றுவோம் மற்றும் பொருந்தும் சட்டத்தின் கீழ் தேவையான ஏதேனும் பிற படிகளை மேற்கொள்வோம். அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.

10. உங்கள் தகவல்களுக்கு யார் பொறுப்பு?

அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் திருத்தலாம் அல்லது புதுப்பிக்கலாம். புதிய தனியுரிமைக் கொள்கையை நாங்கள் பதிவிடுவோம், மேலே “கடைசியாக திருத்தியது” எனும் தேதியை மாற்றுவோம் மற்றும் பொருந்தும் சட்டத்தின் கீழ் தேவையான ஏதேனும் பிற படிகளை மேற்கொள்வோம். அவ்வப்போது எங்கள் தனியுரிமைக் கொள்கையை மதிப்பாய்வு செய்யவும்.
“ஐரோப்பிய பிராந்தியத்தில்” உள்ள நாட்டிலோ பகுதியிலோ நீங்கள் வசித்தால் (ஐரோப்பிய ஒன்றியத்தில் மற்றும் பிறவற்றில் உள்ள நாடுகளும் அடங்கும்) அண்டோரா, ஆஸ்திரியா, அஸோரஸ், பெல்ஜியம், பல்கேரியா, கனேரி தீவுகள், சேனல் தீவுகள், குரேஷியா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், பிரெஞ்சு கயானா, ஜெர்மனி, ஜிப்ரால்டர், கிரீஸ், குவாடலூப், ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஐல் ஆஃப் மேன், இத்தாலி, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மடீரா, மால்டா, மார்டினிக், மயோட்டீ , மொனாகோ, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், சைப்ரஸ் குடியரசு, ரீயூனியன், ரோமானியா, சான் மரினோ, செயிண்ட்-மார்டின், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜியம், சைப்ரஸில் உள்ள ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆளுமைக்கு உட்பட்ட தளங்கள் (அக்ரோதிரி மற்றும் தெகெலியா), மற்றும் வாடிகன் சிட்டி) அல்லது நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவிற்கு வெளியில் வசித்தால் உங்கள் தகவல்களுக்குப் பொறுப்புடைய தரவுக் கட்டுப்பாட்டாளர் Meta Platforms Ireland Limited ஆகும்.
நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் வசித்தால் உங்கள் தகவல்களுக்குப் பொறுப்புடைய நிறுவனம் Meta Platforms Inc. ஆகும்.

11. எங்களைத் தொடர்புகொள்ளவும்

இந்தத் தனியுரிமைக் கொள்கை குறித்து உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ உங்கள் தகவல்கள், எங்கள் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து கேள்விகள், புகார்கள் அல்லது கோரிக்கைகள் இருந்தாலோ எங்களைத் தொடர்புகொள்ளலாம். workplace.team@fb.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ பின்வரும் அஞ்சல் முகவரியிலோ எங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம்:
அமெரிக்கா & கனடா
Meta Platforms, Inc.
கவனத்திற்கு: Privacy Operations
1601 Willow Road
Menlo Park, CA 94025
உலகின் மற்றப் பகுதி (ஐரோப்பிய பிராந்தியம் உட்பட):
Meta Platforms Ireland Limited,
Merrion Road
Dublin 4
D04 X2K5
Ireland
Meta Platforms Ireland Limitedக்கான தரவுப் பாதுகாப்பு அதிகாரியை இங்கே தொடர்புகொள்ளலாம்.