தரவுச் செயலாக்கப் பிற்சேர்க்கை

  1. விளக்கங்கள்
    இந்தத் தரவுச் செயலாக்கப் பின்னிணைப்பில், “GDPR” என்பது பொதுவான தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஒழுங்குமுறை (EU) 2016/679), மற்றும் “கட்டுப்படுத்துநர்”, “தரவுச் செயலாக்கி”, “தரவுப் பொருள்”, “தனிநபர் தரவு”, “தனிநபர் தரவு மீறல்” மற்றும் “செயலாக்கம்” ஆகியவை GDPR இல் விவரிக்கப்பட்டுள்ள அதே அர்த்தங்களைக் கொண்டிருக்க வேண்டும். “செயலாக்கப்பட்டது” மற்றும் “செயல்முறை” “செயலாக்கம்” என்பதன் விளக்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். GDPR மற்றும் அதன் வகைமைகளுக்கான குறிப்புகளில் UK சட்டத்தில் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளபடி GDPR உள்ளடங்கும். இந்த ஒப்பந்தத்தில் வேறு எங்கும் வரையறுக்கப்பட்டுள்ள அதே அர்த்தங்களை இங்கு வரையறுக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் கொண்டிருக்கும்.
  2. தரவுச் செயலாக்கம்
    1. உங்கள் தரவுக்குள் இருக்கும் தனிப்பட்ட தரவுகள் தொடர்பாக (“உங்கள் தனிப்பட்ட தரவு”), இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயலாக்கியாக அதன் செயல்பாடுகளை நடத்துவதில், Meta பின்வருபவற்றை உறுதிப்படுத்துகிறது:
      1. செயலாக்கத்தின் கால அளவு, பொருள் விவரம், இயல்பு மற்றும் நோக்கம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும்;
      2. செயலாக்கப்பட்ட தனிப்பட்ட தரவு வகைகளில் உங்கள் தரவு வரையறையில் குறிப்பிடப்பட்டவை அடங்கும்;
      3. சேகரிக்கப்பட்டவர்களின் வகைகளில் உங்கள் பிரதிநிதிகள், பயனர்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவு மூலம் அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய பிற நபர்கள் அடங்குவர்; மற்றும்
      4. உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பாக தரவுக் கட்டுப்படுத்துநராக உங்கள் கடமைகள் மற்றும் உரிமைகள் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    2. ஒப்பந்தத்தின் கீழ் அல்லது அதனுடன் தொடர்புடைய உங்கள் தனிப்பட்ட தரவை Meta செயலாக்கும் அளவிற்கு, Meta:
      1. GDPR இன் பகுதி 28(3)(a) மூலம் அனுமதிக்கப்படும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, உங்கள் தனிப்பட்ட தரவை மாற்றுவது உட்பட, இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உங்களின் அறிவுறுத்தல்களின்படி மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்கும்;
      2. இந்த ஒப்பந்தத்தின் கீழ் உங்களின் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அதன் பணியாளர்கள் ரகசியத்தன்மைக்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர் அல்லது உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான ரகசியத்தன்மையின் பொருத்தமான சட்டப்பூர்வ கடமையின் கீழ் இருப்பதை உறுதிசெய்யும்;
      3. தரவு பாதுகாப்புப் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப மற்றும் நிறுவன நடவடிக்கைகளை செயல்படுத்தும்;
      4. துணைச் செயலாக்கிகளை நியமிக்கும்போது இந்தத் தரவுச் செயலாக்கப் பின்னிணைப்பின் 2.c மற்றும் 2.d பகுதிகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மதிப்பளிக்கும்;
      5. GDPR இன் அத்தியாயம் III இன் கீழ் சேகரிக்கப்படுபவர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அதனை அனுமதிக்க, Workplace மூல இது சாத்தியப்படும் பட்சத்தில், தகுந்த தொழில்நுட்ப மற்றும் நிறுவனரீதியிலான நடவடிக்கைகளில் உங்களுக்கு உதவும்;
      6. Metaவுக்குக் கிடைக்கும் தகவல் மற்றும் செயலாக்கத்தின் இயல்புநிலையைக் கணக்கில் கொண்டு GDPR இன் சட்டப்பிரிவுகள் 32 முதல் 36 வரை உள்ளவற்றுக்கு உட்பட்ட கடமைகளுடன் இணங்குவதற்கு உங்களுக்கு உதவும்;
      7. ஒப்பந்தம் முடிந்தவுடன் ஐரோப்பிய யூனியன் அல்லது உறுப்பின நாட்டின் சட்டத்தின்படி தனிப்பட்ட தரவு வைத்திருக்கப்பட வேண்டிய நிலை இல்லாத வரை, ஒப்பந்தப்படி தனிப்பட்ட தரவை நீக்கும்;
      8. GDPR இன் சட்டப்பிரிவு 28க்கு உட்பட்டு Meta உடனான கடமைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்த அனைத்துத் தகவல்களையும் கிடைக்கச் செய்வதற்கான Metaவின் திருப்திக்கேற்ப Workplace வழியாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடியும் தகவல்களை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும்; மற்றும்
      9. வருடாந்திர அடிப்படையில், Metaவின் விருப்பத்துக்கேற்ப, SOC 2 வகை II அல்லது Work தொடர்பான Metaவின் கட்டுப்பாடுகளின் தொழிற்முறைத் தரநிலையின்படி, அத்தகைய உங்களுக்கு இங்கு கட்டாயமாக்கப்படும் மூன்றாம் தரப்புத் தணிக்கையாளரைப் பயன்படுததும். உங்கள் கோரிக்கையின் பேரில், Meta அதன் அப்போதைய தணிக்கை அறிக்கையின் நகலை உங்களுக்கு வழங்கும், அத்தகைய அறிக்கை Metaவின் ரகசியத் தகவலாகக் கருதப்படும்.
    3. Metaவின் துணை நிறுவனங்களுக்கும் மற்ற மூன்றாம் தரப்பினருக்கும், உங்கள் எழுத்துப்பூர்வ கோரிக்கையின் பேரில் Meta உங்களுக்கு வழங்கும் பட்டியலின்படி இந்த ஒப்பந்தத்தின் கீழ் அதன் தரவுச் செயலாக்கக் கடமைகளை துணை ஒப்பந்தம் செய்ய நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள். இந்த ஒப்பந்தத்தின் கீழ் Meta மீது விதிக்கப்பட்டுள்ள அதே தரவுப் பாதுகாப்புக் கடமைகளை துணைச் செயலாக்க நிறுவனம் மீது விதிக்கும், அத்தகைய துணைச் செயலாக்க நிறுவனத்துடனான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் மூலம் மட்டுமே Meta அவ்வாறு மேற்கொள்ள வேண்டும். அந்த துணைச் செயலாக்க நிறுவனம் அத்தகைய கடமைகளை நிறைவேற்றத் தவறினால், அந்த துணைச் செயலாக்க நிறுவனத்தின் தரவுப் பாதுகாப்புக் கடமைகளின் செயல்திறனுக்காக Meta உங்களுக்கு முழுப் பொறுப்பாக இருக்கும்.
    4. Meta ஒரு கூடுதல் அல்லது மாற்று துணைச் செயலாக்க நிறுவனத்தை(களை) ஈடுபடுத்தும் பட்சத்தில், (i) மே 25, 2018 முதல், அல்லது (ii) செயலுக்கு வரும் தேதி முதல் (இதில் எது பிறகு ஏற்படுகிறதோ அதன்படி), அத்தகைய கூடுதல் அல்லது மாற்று துணைச் செயலாக்க நிறுவனத்தை நியமனம் செய்வதற்கு பதினான்கு (14) நாட்களுக்கு முன்னதாக Meta உங்களுக்கு அத்தகைய கூடுதல் அல்லது மாற்று துணைச் செயலாக்க நிறுவனம்(கள்) பற்றி தெரிவிக்கும். Metaவிற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பின் பேரில் உடனடியாக ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதன் மூலம், Metaவால் தெரிவிக்கப்பட்ட பதினான்கு (14) நாட்களுக்குள் இதுபோன்ற கூடுதல் அல்லது மாற்று துணைச் செயலாக்க நிறுவனம்(கள்) ஈடுபடுவதை நீங்கள் எதிர்க்கலாம்.
    5. உங்கள் தனிப்பட்ட தரவு தொடர்பான தனிப்பட்ட தரவு மீறல் பற்றி அறிந்தவுடன், தேவையற்ற தாமதமின்றி Meta உங்களுக்குத் தெரிவிக்கும். அத்தகைய அறிவிப்பில், அறிவிக்கப்படும் நேரத்தில் அல்லது முடிந்தவரை விரைவில், தனிப்பட்ட தரவு மீறலின் தொடர்புடைய விவரங்கள், பாதிக்கப்பட்ட உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட பயனர்களின் வகை மற்றும் தோராயமான எண்ணிக்கை, மீறலின் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் மற்றும் மீறலின் சாத்தியமான பாதகமான விளைவுகளைத் தணிக்க, பொருந்தும் இடங்களில், ஏதேனும் உண்மையான அல்லது முன்மொழியப்பட்ட தீர்வுகள் ஆகியவை அடங்கும்.
    6. GDPR அல்லது EEA, UK அல்லது Switzerland இல் உள்ள தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் இந்தத் தரவுச் செயலாக்கக் கூட்டிணைப்பின் கீழ் உங்கள் தரவைச் செயலாக்குவதற்குப் பொருந்தும் அளவிற்கு, ஐரோப்பிய தரவுப் பரிமாற்றப் பிற்சேர்க்கையானது Meta Platforms Ireland Ltd வழங்கும் தரவுப் பரிமாற்றங்களுக்குப் பொருந்தும். இந்த தரவு செயலாக்க சேர்க்கையில் குறிப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
  3. USA செயலாக்குநர் விதிமுறைகள்
    1. Meta USA செயலாக்குநர் விதிமுறைகள் பொருந்தும் அளவுக்கு அவை இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும், இதில் குறிப்பிடப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் வெளிப்படையாக விலக்கப்பட்ட பிரிவு 3க்காக (நிறுவனத்தின் கடமைகள்) சேமிக்கப்படும்.